போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை அதியமான் பள்ளி மாணவர்கள் இறகுபந்து போட்டியில் சாதனை

ஒற்றையர் பிரிவில் பிரஜித் முதலிடமும் இரட்டையர் பிரிவில் பிரஜித் மற்றும் ராகுல் முதலிடமும் பெற்றனர்.19 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மோணிஷா முதலிடமும் இரட்டையர் பிரிவில் மோணிஷா மற்றும் ராகவி முதலிடமும் பெற்றனர்.

ஊத்தங்கரை,  

ஊத்தங்கரை சரக அளவிலான பாரதியார் மற்றும் சுதந்திர தின விழா விளையாட்டு போட்டிகள் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.

இப்போட்டியில் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் ஆண்கள் 14 வயதிற்குட்பட்ட இறகுபந்து ஒற்றையர் பிரிவில் தேனமுதன் முதலிடமும், இரட்டையர் பிரிவில் கார்த்திகேயன் மற்றும் தீபக்சரன் முதலிடம் பெற்றனர். 17 வயதிற்கு உட்பட்ட இறகுபந்து ஒற்றையர் பிரிவில் பிரஜித் முதலிடமும் இரட்டையர் பிரிவில் பிரஜித் மற்றும் ராகுல் முதலிடமும் பெற்றனர்.

பெண்கள் 17 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் தனுஷா பாரதி முதலிடமும் இரட்டையர் பிரிவில் தனுஷாபாரதி மற்றும் கனிமொழி முதலிடமும் பெற்றனர்.

19 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மோணிஷா முதலிடமும் இரட்டையர் பிரிவில் மோணிஷா மற்றும் ராகவி முதலிடமும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் பயிற்சி யளித்த உடற்கல்வி ஆசிரியர் களையும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் சீனி.திருமால்முருகன், செயலர் ஷோபாதி திருமால்முருகன், நிர்வாக அலுவலர் சீனி.கணபதி ராமன், பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணி சரவணகுமார், துணை முதல்வர் அபிநயா கணபதி ராமன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.