ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

வாசுதேவநல்லூரில் யூனியன் கூட்டம்

கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் அனைத்து கவுன்சிலர்களின் வார்டுகளிலும் உள்ள அடிப்படை மற்றும் அவசர பணிகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, தீர்மானத்தில் ஏற்றப்பட்டு நிவர்த்தி செய்யப்படும் என்று பேசினார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், செல்வி ஏசுதாஸ், ஜெயராம், பரமேஸ்வரி, அருணா தேவி பாலசுப்பிரமணியன், விஜய பாண்டியன், விமலா மகேந்திரன், மகாலட்சுமி, லில்லி புஷ்பம், உதவி பொறியாளர் அருள் நாராயணன், மேலாளர் கருத்தப்பாண்டியன், அலுவலர் சிலம்பரசன், அரசு ஒப்பந்ததாரர் கதிர், உள்ளார் மணிகண்டன், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT