பல்லடம் :
பல்லடம் பஸ் நிலையத்தில் கடந்த 23 ந்தேதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்ததாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. அவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள்,பல்லடம் போலீசாரை 9498101343,என்ற எண்ணிலோ,அல்லது பல்லடம் போலீஸ் நிலையத்தை அணுகி தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.