உதய கருடசேவை நடந்தது.  
உள்ளூர் செய்திகள்

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் உதய கருடசேவை

108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.

மாலை மலர்

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உதயகருட சேவை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு உதயகருட சேவை நேற்று நடைபெற்றது. இதையொட்டி பெருமாள் அலங்கரிக்கப்பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி பவளக்கால் சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது.

இதைதொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் குணசேகரன், தக்கார் முருகன், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராதாகிருட்டிணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.