கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பலத்த காற்று வீசுவதால் தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி:

கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அந்த பகுதிகளில் சுமார் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். 

இது தொடர்பாக அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து இன்று காலை மாவட்டத்தில் 250 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. ஆனால் நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.