விபத்தில் சிக்கி சாயமடைந்தவர்களை முதலுதவி அளிக்கப்பட்டது. 
உள்ளூர் செய்திகள்

சாத்தான்குளம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி

சாத்தான்குளம் அருகே காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் 4 பேர் காயமடைந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த சமூகஆர்வலர் ஒருவர் அவர்களை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மாலை மலர்

சாத்தான்குளம்:

நாகர்கோவிலை சேர்ந்த  சண்முகநாதன்  என்பவர் குடும்பத்தினருடன் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். 

சாத்தான்குளம் பன்னம்பாறை அருகே  வளைவில் சென்றபோது  நாசரேத்து சேர்ந்த  பால்ராஜ் (வயது 51), வெங்கடேஷ் (17), சிவ பாலா (18)  ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.  

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் காரில் சென்ற ஒரு பெண்ணும் காயமடைந்தனர். 

அப்போது அங்கே வந்த சமூகஆர்வலரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும்  தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன தலைவருமான  கென்னடி 4 பேரையும் மீட்டு முதலுதவி செய்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

இதனை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டினர்.