உள்ளூர் செய்திகள்

திருச்சி காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

திருச்சி சிறுகனூர் அருகே காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்துள்ளது சிறுகனூர் போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்

மண்ணச்சநல்லூர்,

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கன்னியாகுடி கிராமத்தில் கீழத்தெருவை சேர்ந்த குமரேசன் (24). திருச்சி சிந்தாமணி புதுத்தெருவை சேர்ந்த ஹர்ஷவர்த்தினி(23). இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்து சிறுகனூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு சிறுகனூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுடைய பெற்றோரை, சிறுகனூர் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பேச்சுவார்த்தை தீர்வு கிடைக்காததால் போலீசாரிடம் ஹர்ஷவர்த்தினி கணவருடன் தான் இருபேன் என்று தெரிவித்தார். மேலும் இரு தரப்பினரிடம் எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு சிறுகனூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT