உள்ளூர் செய்திகள்

பேருந்தில் தவறவிட்ட தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கண்டக்டர், டிரைவருக்கு பாராட்டு

பேருந்தில் தவறவிட்ட தங்கச் சங்கிலியை டிரைவர், கண்டக்டர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 4 பவுன் தங்கச்சங்கிலி கிடந்துள்ளது.

திருச்சி:

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செந்தநீர் புரத்திற்கு அரசு நகர பேருந்து பயணிகளுடன் சென்றது. பேருந்தை பாலக்கரை பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது 40) இயக்கினார். தாரநல்லூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் நடத்துனராக பணி செய்தார்.

பேருந்து தெப்பகுளம் அருகே சென்ற போது பெண்கள் அமரும் இடத்தில் சுமார் 4 பவுன் தங்கச்சங்கிலி கிடந்துள்ளது. இதனை பார்த்த நடத்துனர், அதனை எடுத்தார். பின்னர் இது குறித்து டிரைவரிடம் கூறினார். இருவரும் சேர்ந்து அந்த தங்க சங்கிலியை காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களின் நேர்மையான செயலை கண்டு, போலீசார் பாராட்டினர்.

SCROLL FOR NEXT