உள்ளூர் செய்திகள்

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளிக்கு ஸ்டீல் பெஞ்சுகள் - முன்னாள் மாணவர்கள் வழங்கினர்

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் 1986-ம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அவர்கள் தங்கள் பள்ளிப் பருவ சம்பவங்களையும், நாட்களையும் நினைவு கூர்ந்தனர்.

திருச்சி :

பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து பள்ளியின் தாளாளர் ராஜேந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர் அகஸ்டின் பொன்னையா ஆகியோரிடம் இரும்பு பெஞ்சுகள் வழங்கினர். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கிஜி, சுகுமார், இளங்கோ, ஜீவா, நரேந்திர பிரபு, ஹேமந்த் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.