உள்ளூர் செய்திகள்

மசாஜ் சென்டரில் விபச்சாரம்

மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெற்றது வெளிமாநில அழகி உட்பட 3 பேர் மீட்பு

திருச்சி,

திருச்சி கண்டோ ன்மெண்ட் கலெக்டர் அலுவலக சாலை பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே விபச்சார தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அப்போது பாலியலில் இளம் பெண்களை ஈடுபடுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருச்சி திருவெறும்பூர் மூன்றாவது தெரு அடைக்கல அன்னை நகர் பகுதியைச் சேர்ந்த விவேக் கிருஷ்ணன் (வயது 29)என்பவரை கைது செய்தனர். அவரது பிடியில் இருந்த ஹரியானா மாநிலம் செக்க சிக்கா கெய்தால் பகுதியைச் சேர்ந்த 48 வயது அழகி மற்றும் திருச்சியில் லால்குடி திருச்சி இடுமலைப்பட்டி புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 38 மற்றும் 24 வயதுடைய 2 இளம் பெண்கள் ஆகிய மூன்று பேரை போலீசார் மீட்டனர் அவர்கள் வசம் இருந்து 5 செல்போன்கள் மட்டுமல்லாமல் ரூ.5000, ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது