திருச்சி:
திருச்சி அருகே உள்ள குமாரவயலூர் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
அன்று காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களால் பால் காவடி மற்றும் அலகு குத்துதல், அபிஷேகம் நடைபெறும். மேலும் அன்று இரவு முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா நடைபெறும்.
19-ந்தேதி (சனிக்கிழமை) உபயதாரர்களின் அபிஷேகம் நடைபெறும் 20-ந்தேதி (ஞயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் வள்ளிநாயகி தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
21-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணி அளவில் வேலன் வேடனாக விருத்தனாக வருதல் நிகழ்ச்சியும், பின்பு யானை விரட்டல் பின் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மேல் 11.30 மணிக்குள் ரிஷப லக்கினத்தில் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும். பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வயலூர் வரை சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மோகனசுந்தரம், செயல் அலுவலர் அருண்பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.