உள்ளூர் செய்திகள்

கலெக்டர் காரை மறித்த பொதுமக்கள்

மண்ணச்சநல்லூரில் கலெக்டர் காரை பொதுமக்கள் வழி மறித்தனர்செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்

மண்ணச்சநல்லூர்,

மண்ணச்சநல்லூரில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரதீப்குமார் வருகை தந்தார்.அப்போது அப்பகுதி மக்கள் அவரின் காரை வழிமறித்து மனு கொடுத்தனர்.அந்த மனுவில், மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர், காந்தி நகர், பி எஸ் ஏ நகர் பகுதியில் நீண்டகாலமாக சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.பாரதிநகரில் தனி நபர் ஒருவரின் காலி மனையில் மிகப்பெரிய தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் பொக்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.இந்த டவர் அமைக்கப்பட்டால் இப்பகுதி கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் டவர் அமைக்கும் இடம் அருகே குழந்தைகளின் விளையாட்டு மைதானம் உள்ளது.எனவே செல்போன் டவர் இப்பகுதியில் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.