உள்ளூர் செய்திகள்

போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை அகதி

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீஸ்காரரை இலங்கை அகதி இரும்பு கம்பியால் தாக்கினார்

திருச்சி:

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராசா என்கிற லோகேஷ் (வயது 42 ). திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டுனருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துரையிடம் சென்று எனக்கு தண்டனை காலம் முடிந்து விட்டது. பிறகு ஏன் என்னை முகாம் சிறையில் வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இலங்கை அகதி அங்கு இருந்த இரும்பு கம்பியால் போலீஸ்காரர் துரையை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இது குறித்து போலீஸ்காரர் துரை கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் இலங்கை அகதி லோகேஷ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இலங்கை அகதி லோகேஷ் மீது மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலும் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT