உள்ளூர் செய்திகள்

செல்போன் வெடித்து சிதறியதில் 3 பெண்கள் காயம்

திருச்சியில் மின்னல் பாய்ந்து செல்போன் வெடித்து சிதறியதில் 3 பெண்கள் காயமடைந்தனர் வயலில் வேலை பார்த்த போது சோகம்

திருச்சி,

திருச்சி மருங்காபுரி அடுத்த வகுத்தால்வார்பட்டியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 30).

சம்பவத்தன்று இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்து லெட்சுமி(40), பெரியம்மாள் (55) ஆகியோர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென அங்கு மின்னல் பாய்ந்தது. மணிமேகலை வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது. இதில் மணிமேகலை படுகாயம் அடைந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து காயமடைந்த 3 பேரையும் மணபாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT