உள்ளூர் செய்திகள்

திருச்சி வண்ணாங்கோவில் அருகே தார் உற்பத்தி ஆலையின் புகை மூட்டத்தால் 10 பேர் மயக்கம்

திருச்சி வண்ணாங்கோவில் அருகே தார் உற்பத்தி ஆலையின் புகை மூட்டத்தால் 10 பேர் மயக்கம் அடைந்தனர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

திருச்சி:

திருச்சி வண்ணாங்கோவில் அருகே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனியார் தார் உற்பத்தி ஆலைஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தார் உற்பத்தி ஆலையில் அவ்வபோது மிகவும் கடுமையான புகை மூட்டத்துடன் கரும்புகை வெளி வருகிறது.இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி சுவாசக் கோளாறுகள் ஏற்படுவது உடன் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக வண்ணாங் கோயில் திருநகர் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதில் 3 பேருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT