மரக்கன்றுகள் நடப்பட்ட போது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

தளவாய்புரம் பஞ்சாயத்தில் மரக்கன்று நடும் விழா

தளவாய்புரம் பஞ்சாயத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பஞ்சாயத்தை சோலை வனமாக்கும் அரசின் திட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மதன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

மாலை மலர்

ஏர்வாடி:

தளவாய்புரம் பஞ்சாயத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பஞ்சாயத்துக்கு ட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாயத்தை சோலை வனமாக்கும் அரசின் திட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மதன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, டி.வி.எஸ். அறக்கட்டளை முருகன், களக்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையர்கரசி, ஒன்றிய பொறியாளர் பிரவின், பணி மேற்பார்வையாளர் சீனிவாச ராகவன், நல்லையா பீட்டர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாச பெருமாள், ஊராட்சி செயலர் திருமலை நம்பி, பணிதள பொறுப்பாளர் நாச்சியார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.