உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் மரக்கன்று நடும் விழா

ஒரே நாளில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. ஊட்டி தீட்டுக்கல் பகுதியிலும் மரக்கன்று நடப்பட்டது.

மாலை மலர்

ஊட்டி,

ஊட்டி நகராட்சியில் தூய்மை இந்தியா உலக காடுகள் தினத்தை முன்னிட்டு 21-வது வார்டு லோயர் பஜார் பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் மரக்கன்றுகள் நடபட்டது. இதில் நகராட்சி ஆணை யாளர் காந்திராஜன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். மேலும் ஊட்டி தீட்டுக்கல் பகுதியிலும் மரக்கன்று நடப்பட்டது. நேற்று ஒரே நாளில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் நகராட்சி நகர் நல அலுவலர் ஸ்ரீதர், சுகாதார அலுவலர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.