தென்காசி:
தேசிய கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பால் இந்தியா ஸ்வச் பாரத் என்னும் தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டி, கட்டுரை போட்டி, வண்ணம் தீட்டுதல் போட்டி, படம் வரைதல் போட்டி மற்றும் போஸ்டர் தயாரித்தல் போன்ற பல்வேறு வகையான போட்டிகளை இந்தியா முழுவதும் நடத்தியது.
பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இதில் 5-ம் வகுப்பு மாணவன் அபினவ் ஜெய் வண்ணம் தீட்டுதல் போட்டியிலும், 7-ம் வகுப்பு மாணவன் முஹம்மது சுலை மான் கையெழுத்து போட்டி யிலும் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் 12 பேர் கையெழுத்து போட்டியிலும், 3 பேர் வண்ணம் தீட்டுதல் போட்டியிலும், 3 பேர் கட்டுரை போட்டியிலும் பள்ளி அளவில் முதலிடம் பெற்றனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளி தாளாளர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.