தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாசை வெற்றி பெற்ற மாணவர் சந்தித்து வாழ்த்து பெற்ற காட்சி. 
உள்ளூர் செய்திகள்

ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சதுரங்கப் போட்டியில் மாநில அளவில் சாதனை

ஹரி நந்தனா, ஜெகத் பிரபு மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர். ஜகத் பிரபு மாநில அளவில் 2-ம் இடத்தையும், மாணவி ஹரி நந்தனா 7-ம் இடத்தையும் பிடித்தனர்.

தென்காசி:

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ஹரி நந்தனா மற்றும் மாணவன் ஜெகத் பிரபு திருச்சி செஸ் அசோசியேஷன் நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் ஜகத் பிரபு மாநில அளவில் 2-ம் இடத்தையும், மாணவி ஹரி நந்தனா மாநில அளவில் 7-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாசை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.