வெற்றி பெற்ற மாணவனை பள்ளி தாளாளர்,முதல்வர் பாராட்டினர். 
உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் வெற்றி

சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவன் சமேரியா மேவிஸ் 2-ம் இடத்தை பிடித்தார்.

தென்காசி:

ஐ.பி.எல். செஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த மாணவன் சமேரியா மேவிஸ் 9 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் கலந்து கொண்டு 2-ம் இடத்தை பிடித்து சுழல் கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்றார். வெற்றி பெற்ற மாணவன் சமேரியா மேவிசை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.