மோயர்பாயிண்ட் பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள். 
உள்ளூர் செய்திகள்

விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்ப நிலை அதிகரி த்துள்ளதால் பொதுமக்கள் அவதி க்குள்ளாகி வருகின்றனர்.விடுமுறை நாளான இன்று கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

கொடைக்கானல்:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்ப நிலை அதிகரி த்துள்ளதால் பொதுமக்கள் அவதி க்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் மலை ஸ்தலங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். விடுமுறை நாளான இன்று கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால் மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

மேலும் ஏரிச்சாலையை சுற்றி ஏராளமானோர் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். தூண்பாறை பகுதியில் யானைகள் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வாகன ங்களால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்து.

சீசன் மற்றும் விடுமுறை காலங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிக சுற்றுலா பயணிகள் வந்ததால் சிறு குறு வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.