உள்ளூர் செய்திகள்

தக்காளி விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தருமபுரி மாவட்டம், கடத்தூரை சுற்றியுள்ள, 30-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர் பயிராக காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர். இதில் அதிக அளவு தக்காளியை பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த, 10 நாட்களுக்கு முன்பு , ஒரு பாக்ஸ், தக்காளி விலை ரூ. 100 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.இதனால் அறுவடை கூலி கூட கிடைக்காத நிலையில் கடும் விவசாயிகள் பாதிப்பு அடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் வரை 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ், 200 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி நேற்று வரத்து குறைவால் திடீரென விலை உயர்ந்து, 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ், ரூ 500க்கு விற்கப்பட்டது. இதனால் தக்காளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தக்காளி மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT