டி.என்.பி.எஸ்.சி 
உள்ளூர் செய்திகள்

நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்களை இணைப்பது கட்டாயம்- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்களை இணைப்பது குறித்து ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி அறிவுறுத்தி இருந்தது.

மாலை மலர்

சென்னை:

டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வர்கள் நிரந்தர பதிவு எண்ணுடன், ஆதார் எண்களை பிப்.28-ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வுகளை எழுத பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் நிரந்தரப்பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வாளர்களும் தங்களது ஆதார் விவரங்களை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிப்புகளுக்கு நிரந்தரப்பதிவு கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு கிரண் குராலா தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... உ.பி. சட்டசபை தேர்தல் - அலிகாரில் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரம்