சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. வார இறுதி நாட்களில் மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபடுவதற்கு அனுமதியில்லை என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
அதன்பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நாளை (28.1.2022) முதல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிலும் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.