உள்ளூர் செய்திகள்

தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் நள்ளிரவில் கைது - பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டம்

தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.அவதூறு வழக்கில் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளரை கைது செய்தனர்.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் குவிந்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT