துப்பாக்கி சுடும் போட்டியில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சாம்பியன் பட்டத்தை வென்றார். 
உள்ளூர் செய்திகள்

துப்பாக்கி சுடும் போட்டியில் திருவண்ணாமலை எஸ்.பி. சாம்பியன்

வடக்கு மண்டல அளவில் நடந்தது பெண் போலீசார் 5 பதக்கங்களை வென்றனர்

மாலை மலர்

திருவண்ணாமலை:

செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் வடக்கு மண்டல காவல் துறை தலைவர்.கண்ணன் தலைமையில் கடந்த 3,.4 ஆகிய இரண்டு நாட்கள் வடக்கு மண்டல காவல்துறை அளவில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.

இதில் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.கார்த்திகேயன் ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் முதலிடத்தையும், இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடத்தையும், பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் 2-ம் இடத்தையும் வென்றார்.

மேலும் வந்தவாசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்தி ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதலில் 2-வது இடத்தையும் வென்றார்.

இதன் தொடர்ச்சியாக பெண் காவலர்களுக்கென நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட திருவண்ணாமலை மாவட்ட பெண் போலீசார் 5 பதக்கங்களை வென்றனர்.