திருவண்ணாமலையில் இன்று காலை பக்தர்கள் கிரிவலம் சென்ற போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் கிரிவலம்

புரட்டாசி பவுர்ணமி முன்னிட்டு வழிபாடுஇன்று அதிகாலை முதல் நாளை அதிகாலை வரை பவுர்ணமி உள்ளது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் போல் பூண்டிருக்கும். புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று அதிகாலை 4.06 மணிக்கு தொடங்கி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.09 மணி வரையிலும் உள்ளன.

இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கிரிவலம் சென்றனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.