மழையால் வீடு இழந்த மூதாட்டிக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ நிவாரணம் வழங்கிய போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

கொட்டகையில் மரம் விழுந்து 10 ஆடுகள் சாவு

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்

மாலை மலர்

செய்யாறு:

செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியம், ஆலத்தூர் கிராமத்தில் மான்டஸ் புயல் மழை காரணமாக ஆட்டுக்கொட்டகை மீது மரம் முறிந்து விழுந்ததில் 10 ஆடுகள் பலியாகின.

பாதிக்கப்பட்ட ஆட்டின் உரிமையாளருக்கும், அதே போல் வீரம்பாக்கம் கிராமத்தில் மழையால் வீடு இழந்த மூதாட்டிக்கும், ஒ.ஜோதி எம்எல்ஏ நேரில் சென்று பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதல் கூறி தலா ரூபாய் 5000 பணமும், அரிசி, காய்கறிகள் மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

மேலும் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசின் நிவாரணம் உடனடியாக கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம்கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் திராவிட முருகன், ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் உள்பட பலர் இருந்தனர்.