மின்சார ஊழியர்கள் அலுவலகம் முன்பு போராட்டம் செய்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

மின் ஊழியர்கள் அலுவலகம் முன்பு போராட்டம்

ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் மின்கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் பாதிப்பு

வந்தவாசி:

வந்தவாசி துணை மின் நிலையத்தில் ஊழியர்க ளான ராம்பிரகாஷ், பாபு, காண்டீபன், ஆகியோர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்து நபர் மின்சார ஊழியர்கள் மீது திடீரென தாக்கியுள்ளார்.

இது குறித்து மின்சார ஊழியர்கள் வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் இன்று அனைத்து மின் ஊழியர்கள் பதிவேட்டில் கையொப்பமிடாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின் ஊழியர்கள் மீது தாக்கிய நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் ஊழியர்கள் வலியுறுத்தினர்.

மின் ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் மின் கட்டணம் செலுத்துபவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பிச் சென்றனர்.

மின் ஊழியரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் போராட்டத்தால் வந்தவாசி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.