உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்வு கூட்டம்

16-ந் தேதி நடக்கிறது மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக் கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் திருவண்ணா மலை உதவி கலெக்டர் தலைமையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலக பின்புறம் உள்ள கூட்ட அரங்கில் நடை பெற உள்ளது.

இந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக் கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தெரிவித்துள்ளார்.