ஆரணி:
ஆரணியில் டீ கடைகள் மற்றும் ஓட்டல்களில் டீதூள் பாலில் கலப்படம் உள்ளதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் ஆரணி உணவு பாதுகாப்பு அதிகாரி கைலேஷ் ஆகியோர் தலைமையில் டீ கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் ஆரணி பஜார் வீதி சத்தியமூர்த்தி சாலை மார்க்கெட் வீதி உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்தனர்.
இதில் தரமற்ற முறையில் டீ தூள்கள் பயன்படுத்தப்படுகின்றதா எனவும் பாலில் தண்ணீர் கலக்கபட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டு டீ தூள்கள் பால் ஆகியவற்றை சோதனைக்கு அனுப்பட்டுள்ளதாகவும் ஆய்வுக்கு பின்னரே நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.