திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்ற போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

ஆடி பவுர்ணமியையொட்டி வழிபாடுசிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாத பவுர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி மாத பவுர்ணமி இன்று காலை 10. 20 மணிக்கு தொடங்கி நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை உள்ளது. இதையொட்டி இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

பவுர்ணமியையொட்டி வேலூர், சென்னை, பெங்களூர், சேலம், விழுப்புரம், காஞ்சீபுரம் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.