உள்ளூர் செய்திகள்

துப்பாக்கியால் சுட்டு மான் வேட்டை; 3 பேர் கைது

போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினர் 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

போளூர்:

திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அ ருண்லால் உத்தரவின் பேரில் போளூர் வனச்சரக அலுவலர் குமார் தலைமையில், வனவர்கள் சிவகுமார், சந்திர சேகரன் மற்றும் வனக்காப்பா ளர்கள் அல்லியாளமங்கலம் காப்புக்காடு, அல்லிக்கட்டை சரகத்தில் காடு ஆகிய பகுதி களில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டில் பெண் புள்ளிமானை, நாட்டு துப் பாக்கி மூலம் வேட்டையாடி, அதனை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற 3 வாலி பர்களை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் ரோந்து பணி தேவிகாபுரத்தை சேர்ந்த சிவா (வயது 27), போளூரை சேர்ந்த சாம்சன் (26), கிளியனூரை சேர்ந்த அரி (25) என்பது தெரிய வந்தது.

இதை யடுத்து 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 நாட்டு துப்பாக்கிகள், ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வேட்டையாடப்பட்ட மானை கால் நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து காட்டில் புதைத்தனர்.