உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை

பெரணமல்லூர் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்

மாலை மலர்

சேத்துப்பட்டு:

பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு துணை தலைவர் லட்சுமி லலிதா வேலன், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகள், ஒன்றிய பொது நிதி கணக்குகள், மற்றும் கிராமப்புறங்களில் நடைபெற உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள், பிற துறை அலுவலர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.