உள்ளூர் செய்திகள்

புதிய ரேசன் கடை கட்ட வேண்டும்

பொதுமக்கள் வலியுறுத்தல் மழை பெய்தால் பொருட்கள் நனைந்து போவதாக புகார்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு கிராமத்தில் கற்பகம் கூட்டுறவு ரேசன் கடை சித்திரசாவடி கேட் பகுதியில் பழுதடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

மழை பெய்தால் ரேசன் பொருட்கள் நனைந்து போகும் நிலை உள்ளது. எனவே புதிய ரேசன் கடை கட்ட, பழைய ஊராட்சி அலுவலகம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் பூமி பூஜை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் கட்டிட பணிகள் தொடங்கவில்லை. எனவே புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.