பலியான காட்டெருமை 
உள்ளூர் செய்திகள்

மின் வேலியில் சிக்கி காட்டெருமை பலி

மேய்ச்சலுக்கு சென்றபோது பரிதாபம் போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

சந்தவாசல் அருகே உள்ள வடகாது அத்திமூர் ஏழுமலை மகன் குரு நிலத்தில் நேற்று காலை அவ்வழியே மேய்ச்சலுக்கு வந்த காட்டெருமை மின் சாரம் தாக்கி இறந்தது.

இது குறித்து தகவலறிந்த போளூர் வனத்துறை அலுவலர் குமார், கிராம நிர்வாக அலுவலர் இளையகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் மற்றும் குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT