ஜெயிலர் ரஜினி தோற்றத்தில் விநாயகர் சிலை. 
உள்ளூர் செய்திகள்

ஜெயிலர் பட ரஜினி தோற்றத்தில் விநாயகர் சிலை

உடுமலையை அடுத்த பூளவாடியை சேர்ந்தவர் ரஞ்சித் . ரஜினி படங்களின் கதாபாத்திரங்களை போல களிமண்ணால் சிலை செய்து ரஜினியிடம் வாழ்த்து பெற்றவர்.

உடுமலை : 

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடியை சேர்ந்தவர் ரஞ்சித் . நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான இவர் புதிதாக வெளியாகும் ரஜினி படங்களின் கதாபாத்திரங்களை போல களிமண்ணால் சிலை செய்து ரஜினியிடம் வாழ்த்து பெற்றவர். இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் மற்றும் வெளிவர உள்ள லால் சலாம் ஆகிய படங்களின் ரஜினி கதாபாத்திரத்தோற்றங்களை களிமண் மூலம் சிலை வடித்துள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை செய்து அசத்தியுள்ளார்.இவரை அப்பகுதி மக்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்தினர்.

SCROLL FOR NEXT