பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்ற காட்சி. 
உள்ளூர் செய்திகள்

விஜய் மக்கள் இயக்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா

விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

 திருப்பூர் :

திருப்பூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை சார்பாக தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே.சங்கர் தலைமையில் பல்லடம் தொகுதி பூமலூர் பகுதியில் விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.தொடர்ந்து கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

 விழாவில் தெற்கு மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், தெற்கு மாவட்ட ஆலோசகர் முருகானந்தம், தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இவ்விழாவில் மங்கலம் பகுதி தலைவர் பாலசுப்பிரமணியன், பகுதிச் செயலாளர் சம்சுதீன், துணை தலைவர் விக்னேஷ், பொருளாளர் நவீன், இளைஞரணி தலைவர் மணிகண்டன், இளைஞரணி செயலாளர் விஜய் மற்றும் திருப்பூர் மேற்கு பகுதி தலைவர் விஜய், பல்லடம் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT