மங்கலம் :
தமிழக அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை புதிய அமைச்சராக சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.உதயநிதிஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
இதையடுத்து மங்கலம் ஊராட்சி சார்பில் சின்னப்புத்தூர் பகுதியில் தி.மு.க. கட்சியின் கொடியேற்றப்பட்டது. மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி கொடியேற்றினார். அதனைத்தொடர்ந்து மங்கலம் பகுதியில் பட்டாசு வெடிக்கப்பட்டதுடன் பொதுமக்கள்,மங்கலம்- அங்கன்வாடி மைய குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, கட்சியின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுல்தான்பேட்டை தம்பணன், தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சகாபுதீன் , மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளருமான எம்.ஏ.முகமது இத்ரீஸ், திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.ஏ.முகமது ஜுனைத், தெற்கு ஒன்றிய கூடுதல் துணைச்செயலாளர் இடுவாய் ரவிச்சந்திரன், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இடுவாய் சரவணன், சீராணம்பாளையம் செயலாளர் முத்துவேல், இடுவாய் சுரேஷ், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், தெற்கு ஒன்றிய முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ், மற்றும் இளைஞர்அணி நிர்வாகிகள்,மாணவரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.