சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ஆந்தையை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

வெள்ளகோவிலில் அடிபட்ட ஆந்தைக்கு சிகிச்சை

வெள்ளகோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.மருத்துவர் பகலவன் சிகிச்சை அளித்தார்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில், திருவள்ளுவர் நகர் பகுதியில் ஆந்தை ஒன்று அடிபட்ட நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து தன்னார்வ அமைப்பு மூலம் வெள்ளகோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் பேரில் அடிபட்ட ஆந்தையை திருப்பூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் காங்கய பூபதி தலைமையில் மீட்டு, வெள்ளகோவில் கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு சென்று, மருத்துவர் பகலவன் சிகிச்சை அளித்தார்.

அது நலம் பெற்றதை தொடர்ந்து காங்கயம் வன காவலர் ராஜேஸ்வரி மூலமாக வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலை கரை ஓடை அணை பகுதியில் விடப்பட்டது.

SCROLL FOR NEXT