உள்ளூர் செய்திகள்

அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வாழ்த்து

மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ,சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.இளைஞரணியைச் சேர்ந்த சிவா,இடுவாய் கிளை அவைத்தலைவர் இடுவாய் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மங்கலம் :

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும்,சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினை திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ,சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது தி.மு.க. கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சகாபுதீன், திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.ஏ.முகமது ஜீனைத், மங்கலம் பள்ளிவாசல் வார்டு செயலாளர் பாபு என்கிற நூர்முகமது, திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சசி, திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் இடுவாய்ரவி, திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இடுவாய் சரவணன், இளைஞரணியைச் சேர்ந்த சிவா,இடுவாய் கிளை அவைத்தலைவர் இடுவாய் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT