சேலம் :
சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா இளைஞர் அணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே நிறைய உதவிகளை செய்து வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு அரிசி ,மெக்கா பயணம் செல்ல மானிய உதவி ,அதேபோல ஜெருசலேம் செல்ல மானிய உதவி வழங்குகிறது. இந்த உதவிகளை ஆண்டுக்காண்டு அதிகரிக்க செய்கிறது. அதேபோல பெரும்பான்மையான இந்துக்களுக்கும் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்ல பயண கட்டண சலுகை வழங்கிட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனைத்து கோவில்களுக்கும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.