மாணவன் ஜெயோஷ் கிஷோரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. பள்ளி மாணவனுக்கு விருது

பெரம்பலூர் மாவட்டம் சார்பில் தேசபக்தன் விருது வழங்கப்பட்டது. நமது தாய்நாட்டின் பற்றுணர்வை வெளிப்படுத்தும் விதமாக தேசிய கீதப்பாடலை தமிழில் பாடிய மாணவன்.

மாலை மலர்

 திருப்பூர் :

திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவன் ரெ.ஜெயோஷ் கிேஷார்.

இவர் நமது தாய்நாட்டின் பற்றுணர்வை வெளிப்படுத்தும் விதமாக தேசிய கீதப்பாடலை தமிழில் பாடியதால் அவற்றினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்ச்சங்க இலக்கிய ஆய்வு நடுவம் பெரம்பலூர் மாவட்டம் சார்பில் தேசபக்தன் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து மாணவன் ஜெயோஷ் கிஷோரை ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக்சீனியர் செகண்டரி பள்ளி தாளாளர் ஏ.கார்த்திகேயன், பள்ளி முதல்வர் ஜி.பிரமோதினி, பள்ளி ஒருங்கிணைப்பாளர் வி.மோகனா மற்றும் ஆசிரிய,ஆசிரியர்கள் பாராட்டினர்.