கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

தனியார் கல்லூரி பேருந்து மோதி டீக்கடைக்காரர் பலி

காயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் இறந்தார்.

மாலை மலர்

தாராபுரம் :

தாராபுரம் வட தாரை காமராஜபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தவர் இஸ்மாயில்(வயது61). இவர் நேற்று மாலை பஸ் நிலையம் வந்து விட்டு திருப்பி தனது டீ கடைக்கு செல்வதற்காக தாராபுரம் பூளவாடி பிரிவு அருகே சென்றார்.

அப்போது தனியார் கல்லூரி பேருந்து இஸ்மாயில் மீது மோதியது .இதில் காயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் இறந்தார். இது குறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.