பள்ளி சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ள காட்சி. 
உள்ளூர் செய்திகள்

உடுமலை ருத்ரப்பா நகர் பள்ளி சுவர்களில் ஓவியம் வரைவதில் மாணவர்கள் ஆர்வம்

ருதரப்பா நகர் நடுநிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி உள்ளது.பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

உடுமலை, ஆகஸ்ட்.2

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ருதரப்பா நகர் நடுநிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியும் உள்ளது. மாணவ மாணவியர் இருபாலரும் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு ஓவியத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி சுவர்களில் சுற்றுச்சூழலை காப்போம் மரம் வளர்ப்போம். நீரை பாதுகாப்பது அவசியம் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியம் வரைவதால் மாணவர்களுக்கு மனம் ஒரு நிலைப்படும். எனவே மாணவர்களுக்கும் ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்படுத்தப்பட்டது என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT