சிறப்பு அலங்காரத்தில் முருகன். 
உள்ளூர் செய்திகள்

வெள்ளகோவில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. முருகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் ஆகிய கோவில்களில் கிருத்திகையொட்டி நேற்று முருகருக்கு சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT