கருட வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

அவினாசி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை மலர்

அவினாசி:

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அவினாசியிலுள்ள கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் அவினாசி காரணப் பெருமாள் கோவில்,கருவலூர் கருணாகர வெங்கட ரமண பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.