சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன விநாயகர். யாகசாலை பூஜையில் பக்தர்கள் கலந்துகொண்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

உடுமலை விநாயகர் கோவிலில் சனி பெயர்ச்சி சிறப்பு பூஜை

மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானதை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.பக்தர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

உடுமலை :

உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சனி பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானதை யொட்டி உடுமலை திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.சித்தி புத்தி விநாயகர் கோவிலில் அதிகாலையில் கோ பூஜை மற்றும் ப்ரீதி யாகசாலை ஹோமமும் நடந்தது. தொடர்ந்து சனி பகவானுக்கு 108 பால்குடம் அபி ஷேகம், தீபாராதனை நடந்தது பக்தர்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

பிரசன்ன விநாயகர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பலவி தமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. சனி பகவானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்ப ட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சனிபக வானை வழிபட்ட னர்.

SCROLL FOR NEXT