கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

சாலைப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

புதுராம கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டதுகடந்த 2 வாரத்திற்கு மேலாக ஜல்லிகற்கள் மட்டும் போடப்பட்டுள்ளது

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுராம கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 வாரத்திற்கு மேலாக ஜல்லிகற்கள் மட்டும் போடப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. மேலும் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்தில் மிகுந்த அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். எனவே விரைவில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT