கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் குழந்தையை கடித்து குதறிய வெறிநாய்கள்

நைனிகா (வயது 2) என்ற பெண் குழந்தை தனது வீட்டின் வாசல் முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள். கதறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓேடாடி வந்து அங்குள்ள வெறி நாய்களை துரத்தினர்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகரம் பெரியாண்டிபாளையம் பிரிவு அருகே உள்ள ஆண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி, 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று நைனிகா (வயது 2) என்ற பெண் குழந்தை தனது வீட்டின் வாசல் முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள்.

அப்போது திடீரென 5 வெறிநாய்கள் அப்பகுதிக்கு வந்தது. வந்தவேகத்தில் குழந்தையை சரமாரியாக கடிக்க தொடங்கியது. இதில் குழந்தை வலி தாங்க முடியாமல் கதறினாள். கதறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓேடாடி வந்து அங்குள்ள வெறி நாய்களை துரத்தினர்.

இதில் குழந்தைக்கு கை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT